

அமெரிக்காவும் தென்கொரியா வும் நட்பு நாடுகள். இருநாடுகள் மீதும் அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரியா அடிக்கடி மிரட்டல் விடுத்து வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனைச் சமாளிக்க தென்கொரிய எல்லைப் பகுதிகளில் அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன.
ஆப்கானிஸ்தான், இராக் உள்ளிட்ட நாடுகளில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவம் ஆளில்லா போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. வடகொரியா போர் தொடுத்தால் அந்த நாட்டின் மீது ஆளில்லா போர் விமானங்கள் மூலம் முழுவீச்சில் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் ஆளில்லா விமானங்கள் மூலம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.வுக்கும் அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிகாரம் வழங்கியுள்ளார்.