

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 27-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவின் பேரிடர் மேலாண்மை செய்திதொடர்பாளர் சுடோபோ புர்வோ நுக்ரோஹோ கூறும்போது, ‘‘கிழக்கு ஜாவா மாகாணம், போனோரோகோ மாவட் டத்தில் உள்ள பனாரன் கிராம மலைப்பகுதியில் விவசாயிகள் இன்று காலை (நேற்று) இஞ்சி அறுவடை செய்து கொண்டிருந்த னர். அப்போது திடீரென ஏற் பட்ட நிலச்சரிவில் 30-க்கும் மேற் பட்ட வீடுகள் அப்படியே மண்ணில் புதைந்தன. இதில் 27 பேர் உயிரிழந் துவிட்டதாக தெரியவந்துள்ளது. மாயமான 38 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது’’ என் றார்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள் ளன. ராணுவத்தினர், போலீஸ் உயரதிகாரிகளுடன் இணைந்து பொதுமக்களும் மாயமானவர் களை தேடி வருகின்றனர்.
இந்தோனேஷியாவில் பெரும் பாலான மக்கள் மலைப் பகுதி களில் தான் வசித்து வருகின்றனர். பருவமழையின் தாக்கத்தால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது நிலச்சரிவும் ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்புகள் நிகழ்வதும் அங்கு தொடர்கதையாகி வருகி றது.