Published : 19 Aug 2016 08:59 AM
Last Updated : 19 Aug 2016 08:59 AM

உலகின் மிகப்பெரிய வானூர்தி பறக்கவிடப்பட்டது

உலகின் மிகப்பெரிய வானூர்தி ‘ஏர்லேண்டர் 10’ நேற்று முதன் முறையாக பறக்க விடப்பட்டது.

மத்திய இங்கிலாந்தின் கார்டிங்டன் விமானதளத்திலிருந்து இந்த ஏர்லேண்டர் 10 தனது கன்னிப் பயணத்தைத் தொடங்கியது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஹைபிரிட் ஏர் வெகிக்கிள்ஸ் நிறுவனம் இதனைத் தயாரித்துள்ளது.

விமானம், ஹெலிகாப்டர், ஆகாய கப்பல் (ஏர்ஷிப்) ஆகிய மூன்றின் கலவையாக இந்த வானூர்தி தயாரிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380 விமானத்தின் நீளம் 240 அடிதான். ஆனால், ஏர்லேண்டர் 92 மீட்டர் (302 அடி) நீளம் கொண்டது.

கடந்த 85 ஆண்டுகளுக்கு முன் 1930 அக்டோபர் மாதம் இதே விமானதளத்திலிருந்து ஆர்101 என்ற மிகப்பெரிய ஆகாய விமானம் கிளம்பியது.

ஆனால், பிரான்ஸில் விபத்துக் குள்ளானது. இதில், 48 பேர் உயிரிழந்தனர். அதனால் இவ்வகை வானூர்தி தயாரிப்பை பிரிட்டன் நிறுத்தி வைத்திருந்தது. தற்போது வெற்றிகரமாக ஏர்லேண் டர் 10 தயாரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் கண்காணிப்புப் பணிகளுக்காக இந்த ஏர்லேண்டர் 10 தயாரிக் கப்பட்டது. ஆனால், நிதிப்பற்றாக் குறை காரணமாக கடைசி நேரத்தில் திருப்பி அளிக்கப்பட்டதால், பிரிட் டனின் ஒத்துழைப்புடன் தற்போது பறக்க விடப்பட்டுள்ளது.

வழக்கமான விமானங்களை விட மிகப் பெரியதாகவும், ராட்சத பலூனைப் போன்றும் தோற்றமளிக் கும் இந்த ஏர்லேண்டர் 10, 4,880 மீட்டர் உயரம் வரை பறக் கும். மணிக்கு 148 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் என ஹைபிரிட் ஏர் வெகிக்கிள்ஸ் நிறு வனம் தெரிவித்துள்ளது.

தற்போது பறக்கும் வானூர்தி களிலேயே ஏர்லேண்டர்தான் மிகப்பெரியது. இந்த வானூர்தி யைத் தயாரிக்க பிரிட்டன் அரசு 37 லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.247 கோடி) நிதியுதவி அளித்துள்ளது.

இந்த விமானத்தை வர்த்தகம், சரக்குப் போக்குவரத்து, பயணிகள் விமானம், கண்காணிப்பு என பல்வேறு பணிகளுக்கும் பயன்படுத்த முடியும். ஏர்லேண்டர் 10 கடந்த ஞாயிற்றுக்கிழமையே பறக்க விடப்படுவதாக இருந்தது. சாதகமற்ற பருவநிலை மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் தாமதமாகியுள்ளது.

ஹீலியம் நிரப்பப்பட்ட இந்த ஏர்லேண்டரை ஆட்களின்றி இரண்டு வாரங்களுக்கு நிலையாக பறக்க விட முடியும். ஆட்களுடன் 5 நாட்களுக்கு பறக்க விட முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x