பயங்கரவாதத்துக்கு எதிராக போர்:உலக நாடுகளுக்கு இந்தியா அழைப்பு

பயங்கரவாதத்துக்கு எதிராக போர்:உலக நாடுகளுக்கு இந்தியா அழைப்பு
Updated on
1 min read

பயங்கரவாதத்துக்கு எதிராக, உலக நாடுகள் ஒருமித்தமனதுடன் உறுதியாகப் போராட முன்வர வேண்டும் என இந்தியா வேண்டு கோள் விடுத்துள்ளது.

ஐ.நா. பொதுச்சபையில் ‘மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்’ என்ற தலைப் பில் கருத்தரங்கு நடந்தது.

இதில், ஐ.நா.வுக்கான ‘இந்திய செயல்திட்ட’ தலைமை செயலாளர் மாயாங்க் ஜோஷி பேசியதாவது:

மனித உரிமைகளை முழுமை யாக அனுபவிப்பதற்கு எதிரான பெரும் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் திகழ்கிறது. அச்சத்திலிருந்து விடுதலை என்ற கொள்கைக்கும் அது விரோதமாக இருக்கிறது.

பயங்கரவாதம் என்பது ஜன நாயகம், மனித கண்ணியம், மனித உரிமைகள், மனித உரிமை மேம்பாடு ஆகியவற்றின் மீதான தாக்குதல். துரதிருஷ்டவசமாக பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை மற்றும் மனித உரிமை மேம்பாடு ஆகியவற்றுக்கு இடையே உள்ள இணைப்பு தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. ஒருபுறம், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது. மறு புறம் சர்வதேச சட்டங்கள், மனித உரிமை நெறிமுறைகளைக் கவனிக்க வேண்டியிருக்கிறது.

அடிப்படை உரிமைகள், ஜன நாயகம், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு சட்டப்பூர்வ அரசியல் சாதன அரசுகளை அமைப்ப தற்கு எதிராக இருக்கும் பயங்கர வாதத்துக்கு எதிராக, சர்வதேச சமூகம் ஒருமித்த மனதுடன், உறுதியாகப் போராட ஒன்றிணைய வேண்டும். மனித உரிமைகளை மேம்படுத்துவதும், பாதுகாப்பதும் நாடுகளின் தலையாயக் கடமை.

இவ்வாறு, அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in