Last Updated : 17 Sep, 2016 09:57 AM

 

Published : 17 Sep 2016 09:57 AM
Last Updated : 17 Sep 2016 09:57 AM

அதிபர் தேர்தல் போட்டியில் பின்வாங்க மாட்டேன்: ஹிலாரி கிளிண்டன் உறுதி

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் என்று ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் நடந்த இரட்டை கோபுர நினைவு தின நிகழ்ச்சி யில் பங்கேற்ற ஹிலாரி மயக்கமடைந்து நிலைதடுமாறி னார். அவரது பிரச்சார பயணங் கள் ரத்து செய்யப்பட்டன. அவர் நிமோனியாவால் பாதிக்கப்பட் டிருப்பதாக தகவல்கள் வெளி யாகின. இதை சாதகமாகப் பயன்படுத்திய குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் ட்ரம்ப், பொதுக்கூட்ட மேடையில் ஹிலாரியால் ஒரு மணி நேரம் நின்றுகூட பேச முடியாது என்று விமர்சித்தார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மூன்று நாட்கள் ஓய்வுக்குப் பிறகு நார்த் கரோலினா கிரீன்ஸ்பரோ பகுதியில் நேற்றுமுன்தினம் நடந்த பிரச்சார கூட்டத்தில் ஹிலாரி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: என்னை குறித்து சிலர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் திறன் எனக்கு உள்ளது. அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்.

அதிபர் ஒபாமா அமெரிக்கா வில் பிறக்கவில்லை என்று ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார். அண்மையில் அவர் அளித்த பேட்டியில் ஒபாமா அமெரிக்காவில்தான் பிறந்தார் என்று தெரிவித்துள்ளார். இத் தகைய முரண்பாடான, அநாகரி கமான பிரச்சாரத்தை அவர் எப்போது நிறுத்தப் போகிறார் என்று தெரியவில்லை.

நான் ஆட்சிக்கு வந்தால் முதல் 100 நாட்களுக்குள் குடியேற்ற விதிகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வேன். எல்லோரையும் அரவணைத்து செல்வேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x