அதிபர் தேர்தலில் போட்டியிட ஹிலாரிக்கு ஆதரவாக நிதி சேகரிப்பு

அதிபர் தேர்தலில் போட்டியிட ஹிலாரிக்கு ஆதரவாக நிதி சேகரிப்பு
Updated on
1 min read

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட செய்வதற்கு ஆதரவாக நிதி வசூலை தொடங்கப்போவதாக அரசியல் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

2008-ம் ஆண்டு ஜனநாயக கட்சிக்குள் நடைபெற்ற அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் ஹிலாரி தோல்வியடைந்தார். அதில் வெற்றி பெற்ற ஒபாமா, பின்னர் அதிபர் தேர்தலிலும் வெற்றி வாகை சூடினார். அடுத்த அதிபர் தேர்தல் 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் இம்முறை ஹிலாரி கிளிண்டன் நிறுத்தப்படலாம் என பரவலாக பேச்சு எழுந்துள்ளது.

ஆனால், இது தொடர்பாக பேசிய ஹிலாரி, தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கின் றன. அதில் போட்டியிடுவது தொடர்பான எனது முடிவை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரியாரிட்டிஸ் யு.எஸ்.ஏ. ஆக்சன் என்ற லாப நோக்கமற்ற அரசியல் அமைப்பு, ஹிலாரி கிளிண்டன் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவாக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த செல்வந்தர்களிடம் நிதி திரட்டும் பணியை விரைவில் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in