

பிரான்சில் உள்ள ஒரு தேவால யத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய 2 மர்ம நபர்களை போலீஸார் சுட்டுக் கொன்றனர். முன்னதாக, அங்கிருந்த பாதிரி யாரை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொன்றனர்.
நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள நார்மண்டியின் ரூயன் நகருக்கு அருகே உள்ள தேவால யத்தில் நேற்று பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்த 2 மர்ம நபர்கள் அங்கி ருந்தவர்களை பிணைக் கைதி களாக பிடித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீ ஸார், தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை சுட்டுக் கொன்றனர். முன்னதாக, அந்த மர்ம நபர் கள் பாதிரியாரை கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இந்தத் தாக்குதலுக்கான கார ணம் தெரியவில்லை.