

உக்ரைன் அதிபருக்கு எதிராக கீவ் நகரில் சுமார் 3 லட்சத்து க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐரோப்பிய யூனியனுடனான வர்த்தக உறவைப் புறக்கணித்து வரும் அதிபர் விக்டர் யனுகோவிச் சுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக அந்த நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆனால் அதிபர் விக்டர் தொடர்ந்து ரஷ்யாவுக்கு சாதகமாகவே செயல்பட்டு வருகிறார்.
ஐரோப்பிய யூனியனின் மூத்த அதிகாரி ஸ்டீபன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் அரசிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காததால் அந்த நாட்டு டனான பேச்சுவார்த்தை நிறுத்தப் பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே அதிபர் விக்டர் செவ்வாய்க்கிழமை மாஸ்கோ செல்கிறார். அங்கு அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து இருதரப்பு உறவு, வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அதற்கு எதிராக தலைநகர் கெய்வில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ரஷ்யாவுடனான வர்த்தக உறவால் உக்ரைனுக்கு நஷ்டம் மட்டுமே மிஞ்சுகிறது. அதை விடுத்து ஐரோப்பிய யூனியனுடன் வணிக உறவை ஏற்படுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.