

சத்தீஸ்கர் தலைநகர் பிலாஸ்பூருக்கு அருகில் உள்ள பெண்டாரி கிராமத்தில் நடத்தப்பட்ட கருத்தடை சிகிச்சை முகாமில் 11 பெண்கள் பலியான சம்பவத்திற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் பாதுகாப்பாகவும், சுகாதாரமாகவும் நடைபெற அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார்.
இத்தகவலை, ஐ.நா. பொதுச் செயலாளர் செய்தித் தொடர்பாளர் பர்ஹான் கான் தெரிவித்துள்ளார்.