

ஆப்கானிஸ்தானில் தற்போது கடும் பனிப்பொழிவு காணப்படு கிறது. நூரிஸ்தான், கியூயாம் உள்ளிட்ட மாகாணங்களில் சுமார் 10 அடி உயரத்துக்கு பனி படிந்துள் ளது. அங்குள்ள ஒரு கிராமத்தில் பனிச்சரிவு ஏற்பட்டு 53 பேர் பலியாகி உள்ளனர்.
இதேபோல தலைநகர் காபூலி லும் பல்வேறு இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. காபூல் அருகேயுள்ள 2 கிராமங்கள் பனிச்சரிவில் முழுமையாக புதைந்துள்ளன.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அரசு வட்டாரங்கள் கூறிய போது, கடந்த சில நாட்களில் பனிச்சரிவில் சிக்கி இதுவரை 135-க்கும் மேற்பட்டோர் உயிரிழந் துள்ளனர் என்று தெரிவித்தன.