

மறைந்த குத்துச் சண்டை வீரர் முகமது அலி மகன் முகமது அலி ஜூனியர் (44) அமெரிக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.
முகமது அலியின் இரண்டாவது மனைவி காலிலா காமாசோ அலி. இத்தம்பதியின் மகன் முகமது அலி ஜுனியர். இந்த மாத தொடக்கத்தில் ஜமைக்கா நாட்டில் நடந்த நிகழ்ச்சியில் காலிலா காமாசோ அலியும், முகமது அலி ஜுனியரும் பங்கேற்றனர்.
அங்கிருந்து தாயும் மகனும் கடந்த 7-ம் தேதி விமானம் மூலம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், போர்ட் லார்டர்டாலே ஹாலிவுட் விமான நிலையத்தில் தரையிறங்கினர். இருவரும் முஸ்லிம் என்பதால் விமான நிலை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
அப்போது காலிலா காமாசோ அலி, தான் முகமது அலியின் மனைவி என்று கூறி அதற்கான புகைப்படத்தை ஆதாரமாக காட்டி னார். இதை ஏற்றுக் கொண்ட பாதுகாப்புப் படை அதிகாரிகள் அவரை மட்டும் விடுவித்தனர்.
ஆனால் முகமது அலி ஜூனியரை விடுவிக்க மறுத்துவிட்டனர். தந்தை முகமது அலியுடன் இருக்கும் புகைப்படம் எதுவும் அவரிடம் இல்லாததால் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
‘நீங்கள் முஸ்லிமா, எங்கு பிறந்தீர்கள், உங்களது வீடு எங்கு உள்ளது, என்ன தொழில் செய்கிறீர்கள்’ என்பன உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டன