

அல்ஜீரியா ராணுவத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியதில் 99 பேர் பலியாயினர்.
தலைநகர் அல்ஜீயர்ஸின் தெற்கே 500 கிமீ தொலைவில் உள்ள ஓம் எல் புவாகி என்ற பகுதியில் இந்த விமானம் மோசமான வானிலை காரணமாக செவ்வாய்க்கிழமை விழுந்து நொறுங்கியதாக அல்ஜீரியா வானொலி தெரிவித்தது.
இந்த விமானத்தில் ராணுவ வீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் சென்றதாக பாது காப்புத்துறை வட்டாரங்கள் கூறின.-ஏ.எப்.பி.