

மனிதர்களின் சராசரி வாழ்நாள் பல நாடுகளில் வரும் 2030-ம் ஆண்டுக்குள் 90 வயதாக உயரும் என்று ஆய்வில் தெரி விக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இம்பீரியல் காலேஜ் லண்டன் (ஐசிஎல்) மற்றும் உலக சுகாதார நிறுவனம் இணைந்து, மரணம் மற்றும் நீண்ட நாள் உயிர் வாழ்தல் குறித்த ஆய்வை மேற்கொண்டன. குறிப்பாக தொழிற்சாலைகள் நிறைந்த 35 நாடுகளில் உள்ள மக்களின் வாழ்நாள் எண்ணிக்கை மற்றும் இறப்பு குறித்து ஆய்வு நடத்தின. இந்த ஆய்வு முடிவுகள் பிரிட்டனில் இருந்து வெளியாகும் ‘லான்செட்’ மருத்துவ இதழில் வெளியாகி உள்ளது.
இந்த ஆய்வில் அதிக தனிநபர் வருவாய் உள்ள அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து பொருளாதாரத்தில் தற்போது வளர தொடங்கி உள்ள போலந்து, மெக்சிகோ போன்ற நாடுகளும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப் பட்ட எல்லா நாடுகளிலும் வரும் 2030-ம் ஆண்டுக்குள் மக்களின் சராசரி வாழ்நாள் 90 ஆண்டு களாக உயரும்.
தென் கொரியாவில் இது 90 ஆண்டுகளுக்கு மேலாகவும் இருக்கும். உலகிலேயே அதிக வாழ்நாள் கொண்ட மக்களாக தென் கொரியாவைச் சேர்ந்தவர் கள் இருப்பார்கள். தென் கொரியாவில் பெண் குழந்தை பிறந்தால் 90.8 ஆண்டுகளும், ஆண் குழந்தை பிறந்தால் 84.1 ஆண்டுகளும் உயிர் வாழ்வார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.
இதுகுறித்து இம்பீரியல் காலேஜ் லண்டனைச் சேர்ந்த பேராசிரியர் மஜித் எஸ்ஸாட்டி கூறும்போது, ‘‘உலகில் சராசரி வாழ்நாள் 90 ஆண்டுகளுக்கு மேல் இருப்பது சாத்தியமில்லாதது என்று ஆராய்ச்சியாளர்கள் ஒரு கட்டத்தில் நினைத்தனர். ஆனால், மனிதர்களின் சராசரி வாழ்நாள் மேம்பட்டுள்ளது தெரிய வந் துள்ளது.
தென் கொரியாவைப் பொறுத்த வரை, குழந்தைகளுக்கு அங்கு சரியான ஊட்டச் சத்து வழங்குதல், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் குறைவாக காணப்படுதல், புகைப் பழக்கம் குறைந்து காணப்படுதல், உடல்நலனில் அதிக கவனம் செலுத்துதல், புதிய மருத்துவ அறிவு மற்றும் தொழில்நுட்பங் களை எடுத்துக் கொள்ளுதல் போன்ற காரணங்களால் அவர்களின் சராசரி வாழ்நாள் அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது’’ என்றார்.