

திருமண பந்தம் நீடிப்பதற்கு ப்ளீஸ், தாங்ஸ், ஸாரி ஆகிய வார்த்தைகளை அதிகம் பயன் படுத்துமாறு இளம் ஜோடிகளுக்கு போப் ஜான் பிரான்ஸிஸ் ஆலோசனை வழங்கினார்.
காதலர் தினத்தை முன்னிட்டு வாட்டிகன் சிட்டி, புனித பீட்டர் சதுக்கத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் ஜோடி களுக்கு போப் ஜான் பால் வெள்ளிக்கிழமை சிறப்பு தரிசனம் அளித்தார். இந்நிகழ்ச்சியில் 30 நாடுகளில் இருந்து, வருங்கால மணமகன் மற்றும் மணமகள்கள் சுமார் 25 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
இவர்கள் மத்தியில் போப் பிரான்ஸில் பேசுகையில், “ஒவ்வொரு நாளின் இறுதியிலும் மனதில் அமைதியை ஏற்படுத் தாமல் படுக்கைக்குச் செல்லா தீர்கள். மனதில் அமைதியை ஏற்படுத்தாமல் அன்றைய தினத்தை நீங்கள் முடித்தால், மன இறுக்கமும் தளர்வும் ஏற்படும். அடுத்த நாளும் உங்கள் மனதில் அமைதி ஏற்படுத்த முடியாமல் போய்விடும். திருமண வாழ்க்கை வெற்றி பெறவும், உறவு நீடிக்கவும் ப்ளீஸ், தாங்க்ஸ், ஸாரி ஆகிய எளிய வார்த்தைகளை அதிகம் பயன் படுத்துங்கள். குற்றம் காண முடியாத குடும்பம் எங்கும் இல்லை. அதுபோல் குற்றம் காண முடியாத கணவனோ - மனைவியோ இல்லை. ஏன் குற்றம் காண முடியாத மாமியாரும் இல்லை” என நகைச்சுவையாக முடித்தார் போப் பிரான்ஸிஸ்.
சிறப்பு தரிசன நிகழ்ச்சியை உள்அரங்கத்தில் நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் போப் அழைப்புக்கு காணப்பட்ட மிகப் பெரிய வரவேற்பு காரண மாக இந்நிகழ்ச்சியை புனித பீட்டர் சதுக்கத்தில் நடத்தியதாக வாட்டி கன் அதிகாரிகள் தெரிவித்தனர்.