

ஆப்கானிஸ்தானின் கிழக்கே லோஹர் மாகாணத் தலைநகரான புல்-இ-ஆலமில் உள்ள நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி யாக அக்ரம் நிஜாத் புதிதாக பொறுப்பேற்றிருந்தார். அதற் கான அறிமுக நிகழ்ச்சி நீதிமன்ற கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது.
அப்போது, தற்கொலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதிகள் இருவர் கூட்டத்துக்குள் நுழைந்து, குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில், அக்ரம் நிஜாத் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இத்தாக்குதலில் மேலும் 6 பேர் பலியாகினர். அருகில் இருந்த, 19-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். லோஹர் மாகாண காவல்துறை துணைத் தலைவர் நிசார் அகமது அப்துல் ரஹிம்ஸாய் இத்தகவலை உறுதி செய்தார்.
தலிபான் தீவிரவாதிகள் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற் றுள்ளனர். தலிபான் தீவிரவாதி கள் 6 பேருக்கு கடந்த மாதம் தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டதைத் தொடர்ந்து, நீதித்துறைக்கு எதிரான வன்முறை தாக்குதல் ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வருகிறது.