

உலக கோப்பை கால் பந்தாட்டப் போட்டியில் எனது தாய்நாடான அர்ஜென்டினாவுக்கு பதிலாக பிரேசிலை ஆதரிக்கலாம் என்று போப் ஜான் பிரான்சிஸ் நகைச்சுவையாக தெரிவித்தார்.
போப் ஜான் பிரான்சிஸை பிரேசில் அதிபர் டில்மா ரூசெப் வெள்ளிக்கிழமை சந்தித்தார். அப்போது ரூசெப், எதிர்வரும் உலக கால்பந்தாட்டப் போட்டியில் தங்கள் நாட்டு அணியின் ஜெர்ஸி உடை மற்றும் கால்பந்து ஒன்றை போப்புக்கு பரிசளித்தார். பியூனஸ் அயர்ஸ் நகரின் சான் லாரன்ஸோ கால்பந்தாட்ட கிளப்பின் நீண்டகால ரசிகரான பிரான்சிஸ், போப் பதவியேற்றதில் இருந்து கால்பந்தாட்ட ஜெர்ஸி உடைகளை ஏராளமாக சேகரித்து வைத்துள்ளார்.- பி.டி.ஐ.