நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 20 பேர் பலி

நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 20 பேர் பலி
Updated on
1 min read

நேபாளத்தில் பயணிகள் பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 20 பேர் பலியாகினர். 17 பேர் காயமடைந்தனர்.

விபத்து குறித்து நேபாள போலீஸார் கூறியிருந்தாவது:

நேபாளத்தில் இன்று (வெள்ளிக் கிழமை) அதிகாலை பயணிகள் பேருந்து ஒன்று ஆற்றுப்பாலத்தின் பாலத்தின் தடுப்புச் சுவரை தாண்டி 11 அடி ஆழமுள்ள திரிசூலி ஆற்றில் விழந்தது. இதில் 20 பேர் பலியாகினர்.

போலீஸார் மற்றும் பொது மக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தலைநகர் காத்மாண்டுலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திரிசூலி ஆறு.

மோசமான சாலைகளே விபத்துக்கு காரணம்:

நேபாளத்தின் மலைப் பிரதேசங்களில் போடப்பட்டுள்ள மோசமான சாலைகளே தொடர் விபத்துகளுக்கு காரணம் என கூறப்படுகிறது.

முன்னதாக இம்மாதத்தின் தொடக்கத்தில் தெற்கு நேபாளத்தில் மலை பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 33 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in