

உலகின் மிகச் சிறந்த இயற்பியல் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ் டீன் எழுதிய கடிதம் ரூ.35 லட்சத்துக்கு அமெரிக்காவில் ஏலத்தில் எடுக்கப்பட்டது.
மின்னியல் கோட்பாடு மற்றும் அதன் சிறப்பு சார்பியல் குறித்து ஐன்ஸ்டீனின் அறிவியல் ஆசிரியர் ஆர்தர் கன்வெர்ஸ் 1953-ல் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு 2 பக்க அளவில் விளக்கம் அளித்து ஐன்ஸ்டீன் அவருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதம் நேற்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நேட் டி சாண்டர்ஸ் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. ஆரம்பத் தொகையாக சுமார் ரூ.10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த கடிதத்தை ஏலத்தில் எடுக்க பலர் போட்டியிட்ட நிலையில், கடைசியாக ரூ.35 லட்சத்துக்கு ஏலம் போனது. - பிடிஐ