Last Updated : 03 Jun, 2016 05:29 PM

 

Published : 03 Jun 2016 05:29 PM
Last Updated : 03 Jun 2016 05:29 PM

புதிய உத்திகளுடன் தெற்கு ஆப்கனில் ஆதிக்கத்தை நிலைநாட்டும் தாலிபான்

தெற்கு ஆப்கானில் முக்கிய இடங்களைக் கைப்பற்றி தங்களுடையதாக்கிக் கொள்வதில் தாலிபான் தீவிரம் காட்டி வருகிறது. முக்கியச் சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் ஆகிய போக்குவரத்துப் பகுதிகளை முதலில் கைப்பற்றி ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றனர் தாலிபான் அமைப்பினர்.

முதலில் சோதனைச் சாவடியைத் தாக்கி அங்கிருக்கும் போலீஸார்களை கொன்று அவர்களது ஆயுதங்கள் உள்ளிட்ட பிற முக்கியப்பொருட்களைக் கைப்பற்றுவது. பிறகு முக்கியப் போக்குவரத்துச் சாலையை கிராமத்திலிருந்து துண்டிப்பது, பிறகு தாலிபான் வெள்ளைக் கொடியை அப்பகுதியில் நட்டு சாலைகள் நெடுகவும் வெடிகுண்டுகளை வைத்து சாலை வழியே வர முயற்சிப்போர்களை அச்சுறுத்துவது, மீறி வருவோர்கள் குண்டுகளுக்கு இரையாக்குவது, இதுதான் தாலிபானின் புதிய உத்தியாக தற்போது இருந்து வருவதாக உள்ளூர்வாசிகளும் தலைவர்களும் தெரிவிக்கின்றனர்.

கிராமப்புறங்களுக்கும் நகரத்துக்கும் இடையிலான சாலையைத் துண்டித்து விடுவதால் கிராமங்களுக்கு உணவு செல்வது தடைபடுகிறது. இதனால் கிராமத்தினர் தங்கள் உடமைகளை அப்படியே விட்டுவிட்டு எங்கு உணவும், வாழ்க்கையும் கிடைக்கிறதோ அவ்விடம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர். பெரும்பாலும் கால்நடையாகவே மிக நீண்ட தூரம் சிலர் செல்கின்றனர், சிலர் புறச்சாலை வழியாக கழுதைகளில் புலம் பெயர்ந்து வருகின்றனர்.

திடீர் தாக்குதல் மூலம் இடங்களைக் கைப்பற்றுவதை விட இத்தகைய புதிய உத்தி தாலிபான்களுக்கு தற்போது கைகூடி வருகிறது.

2001-ம் ஆண்டிலிருந்து போர்:

அமெரிக்கப் படைகள் ஆப்கனுக்குள் ஊடுருவியதால் தங்கள் ஆட்சியை இழந்த தாலிபான்கள், அது முதல் காபூல் அரசுக்கு எதிராக ஆயுத எழுச்சி செய்யத் தொடங்கினர். 2014-ல் அமெரிக்க மற்றும் பிற படைகள் ஆப்கனை முற்றிலுமாக விட்டுச் செல்ல தாலிபன்கள் ஆதிக்கம் தலைதூக்கியதோடு, பல பகுதிகளில் வேரூன்றவும் செய்தது.

தெற்கு மாகாணங்களான ஹெல்மாண்ட், காந்தஹார், உருஸ்கான், ஆகிய பகுதிகளில் தாலிபன்கள் வேரூன்றி விட்டனர். இதனையடுத்து ஆப்கன் படைகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமை தெரிவித்துள்ளது.

தாலிபன்களின் இந்த ஆதிக்கத்தினால் 2015-ம் ஆண்டு மட்டும் 3,545 அப்பாவி உயிர்கள் பலியாக, 7,457 பேர் படுகாயமடைந்து உறுப்புகளை இழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x