

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூன் இம்மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இது தொடர்பாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுருப்பதாவது:
ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூன் இலங்கையில் இம்மாதம் 31 தேதி முதல் மூன்று நாட்கள் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தச் சுற்றுப் பயணத்தில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேனாவையும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்திக்கிறார் பான் கி-மூன். இந்தச் சந்திப்பின்போது மனித உரிமைகள் விவகாரம் குறித்து பேசவுள்ளார்.
அதனை தொடர்ந்து இலங்கை தலைநகர் கொழும்புவில் உலக முன்னேற்றத்தின் குறிக்கோள்கள் குறித்து பேச இருக்கிறார்.
மேலும், 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போன்ற மாற்று இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.