வடகொரியா அதிபர் அண்ணன் படுகொலை: 2 பெண்கள் மீது மலேசிய நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு பதிவு

வடகொரியா அதிபர் அண்ணன் படுகொலை: 2 பெண்கள் மீது மலேசிய நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு பதிவு
Updated on
1 min read

வடகொரியா அதிபரின் அண்ணன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இரு பெண்கள் மீது மலேசிய நீதிமன்றம் கொலை குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.

மலேசிய தலைநகர் கோலா லம்பூர் விமான நிலையத்துக்கு கடந்த மாதம் 13-ம் தேதி வந்த வடகொரியா அதிபர் அண்ணன் கிம் ஜாங் நம் முகத்தில் அடையாளம் தெரியாத இரு பெண்கள் தடை செய்யப்பட்ட விஷ திராவகத்தை ஊற்றினர். வலியால் துடித்த நம் அடுத்த சில நிமிடங்களுக்குள்ளாகவே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்திய மலேசிய போலீஸார் இந்தோனேஷியா வைச் சேர்ந்த சித்தி ஆயிஷா (25), வியட்நாமின் டுவன் தை ஹுவாங் (28) என்ற இரு பெண்களை கைது செய்தனர். இருவரையும் நேற்று கோலாலம்பூர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அப் போது இருவர் மீதும் கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட் டிருப்பதாக நீதிபதி படித்து காண் பித்தார். பின்னர் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் சிறைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். மலேசிய சட்டப்படி குற்றவாளிகள் மீதான கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in