Last Updated : 06 May, 2017 12:03 PM

 

Published : 06 May 2017 12:03 PM
Last Updated : 06 May 2017 12:03 PM

அமெரிக்க ராணுவ செயலர் பதவி: சர்ச்சை பேச்சால் வேட்புமனுவை வாபஸ் பெற்றார் ட்ரம்ப் ஆதரவாளர்

அமெரிக்க ராணுவ செயலர் பதவிக்காக அதிபர் ட்ரம்ப்பால் தேர்வு செய்யப்பட்ட மார்க் கீரின் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதனால் கிரீன் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றார்.

அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தைச் சேர்ந்த 52 வயதான குடியரசு கட்சியின் மார்க் கீரின் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பால் ராணுவ செயலாளர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் மார்க் கீரின், முஸ்லிம் சமூகத்தினர் மற்றும் எல்ஜிபிடி வட்டாரத்தினரைக் குறித்து கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மார்க் கீரின்னின் இக்கருத்துக்கு எதிராக பல விமர்சனங்களும் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து மார்க் கீரின் வெள்ளிக்கிழமை ராணுவ செயலாளருக்கான வேட்புமனுவை திரும்பப் பெற்றார்.

இதுகுறித்து மார்க் கீரின் வெளியிட்ட அறிக்கையில், "எனக்கு எதிரான பொய்யான கருத்துகள் அமெரிக்க ராணுவ செயலாளர் பதவிக்கு நான் பரிந்துரை செய்யப்பட்டதை விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. துரதிருஷ்டவசமாக எனது பொது சேவை மற்றும் மத நம்பிக்கைகள் அரசியல் லாபத்திற்காக சிலரால் விமர்சிக்கப்படுகின்றன" என்று கூறப்பட்டுள்ளது.

மார்க் கீரின் வேட்புமனுவை திரும்பப் பெற்றது குறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஹூக் ஸ்கூம்மர் கூறும்போது," மார்க் ராணுவ செயலாளர் பதவிக்கான வேட்பு மனுவைத் திரும்ப பெற்றது அனைத்து அமெரிக்கர்களுக்கும் கிடைத்த நற்செய்தி. குறிப்பாக மார்க்கின் பேச்சால் அவமதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் எல்ஜிபிடி வட்டாரத்தினருக்குக் கிடைத்த நற்செய்தி" என்றார்.

கிரீனுக்கு முன்னதாகவும் ட்ரம்ப்பால் பல்வேறு பதவிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட பல அதிகாரிகள் இதே போன்று சர்ச்சைக் கருத்துகளைப் பேசி தங்கள் மனுவை திரும்பப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x