தாய்லாந்தில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு:ஒருவர் பலி; 30 பேர் படுகாயம்

தாய்லாந்தில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு:ஒருவர் பலி; 30 பேர் படுகாயம்
Updated on
1 min read

தாய்லாந்தின் கடலோர நகரமான பட்டாணியில் அடுத்தடுத்து 3 வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்தார். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தாய்லாந்தின் தெற்கு பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தளங்களை குறிவைத்து இரு வாரங்களுக்கு முன்பு நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்ட பீதியில் இருந்து தாய் லாந்து மக்கள் மீள்வதற்குள் செவ்வாய்கிழமை அன்று கடலோர நகரமான பட்டாணியில் அடுத்தடுத்து 3 குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.

முதல் குண்டு அங்குள்ள பிரபல ஓட்டலின் பின்புறத்தில் இருந்த வாகன நிறுத்துமிடத்தில் வெடித்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது யாரும் அங்கு இல்லாததால் உயிர்சேதம் ஏற்பட வில்லை. இது குறித்து போலீஸ் உயரதிகாரி வின்யூ தியாம்ராஜ் கூறும்போது, ‘‘முதல் குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இரண்டாவது குண்டு ஒட்டலின் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் இருந்து வெடித்து சிதறியது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 30-க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்தனர்’’ என்றார்.

இதேபோல் 3-வது குண்டு அங்குள்ள ஒரு சந்தைப் பகுதியில் வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத் துக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப் பேற்க முன்வரவில்லை. எனினும் தெற்கு பகுதியை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் மீது போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

பட்டாணி நகரில் பெரும் பான்மையாக வசித்து வரும் புத்த மதத்தினருக்கும், தன்னாட்சி கேட்டு போராடி வரும் முஸ்லிம் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அவ்வப்போது சண்டை நிகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பட்டாணி நகரத்துக்கு யாரும் செல்ல வேண்டாம் என பெரும்பாலான உலக நாடுகள் தங்களது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in