Last Updated : 09 Apr, 2017 08:06 AM

 

Published : 09 Apr 2017 08:06 AM
Last Updated : 09 Apr 2017 08:06 AM

ஐ.நா.வின் அமைதிக்கான தூதராகிறார் யூஸப்சாய் மலாலா

ஐ.நா.வின் அமைதிக்கான தூதராக நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானின் யூஸப்சாய் மலாலா நியமிக்கப்படவுள்ளார். ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் அவரை முறைப்படி தேர்வு செய்துள்ளார்.

நியூயார்க்கில் உள்ள ஐ.நா.வின் தலைமையகத்தில் அடுத்த வாரம் நடக்கவுள்ள விழாவில் அமைதி தூதராக மலாலா பொறுப்பேற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்தோனியோ குத்தேரஸ் கூறும்போது, ‘‘பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்காக துணிச்சலாக களமிறங்கி பாடுபட்டவர் மலாலா. தன்னை ஆபத்து துரத்தியபோதும், அதை கண்டுகொள்ளாமல் பணியாற்றியவர். பெண் கல்விக்காக துணிச்சலுடன் அவர் செயலாற்றியது உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மக்களுக்கு ஊக்கம் அளித்தது. ஐ.நா.வின் அமைதிக்கான இளம் தூதராக பொறுப்பேற்பதன் மூலம் உலகில் அமைதி நிலவுவதற்கான நடவடிக்கைகளில் அவர் தீவிரமாக இறங்குவார்’’ என்றார்.

பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடிய மலாலாவை தலிபான் தீவிரவாதிகள் கடந்த 2012, அக்டோபரில் சுட்டனர். அதில் இருந்து உயிர்பிழைத்த மலாலா, தனது போராட்டத்தில் இருந்து பின்வாங்காமல் கூடுதல் உத்வேகத்துடன் பணியாற்றினார். 2013-ல் தனது தந்தையுடன் இணைந்து பெண் கல்விக்கான அறக்கட்டளையை தொடங்கினார். அதன் மூலம் பெண்கள் பொருளாதார ரீதியாக உயர்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது இந்த பணியை பாராட்டி 2014-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப் பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x