தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பஞ்சத்தால் 1.4 கோடி பேர் பரிதவிப்பு

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பஞ்சத்தால் 1.4 கோடி பேர் பரிதவிப்பு
Updated on
1 min read

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பஞ்சத்தால் 1.4 கோடி பேர் பரிதவித்து வருகின்றனர் என்று ஐ..நா. சபையின் உலக உணவு திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆப்பிரிக்கா முழுவதும் கடும் வறட்சி நிலவு கிறது. இதில் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளான மலாவி, மடகாஸ்கர், ஜிம்பாப்வே ஆகியவை கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது அந்த நாடுகளில் வேளாண் உற்பத்தி பாதியாகக் குறைந்துள்ளது.

இதன் காரணமாக மலாவி நாட்டில் 28 லட்சம் பேர், மடகாஸ்கரில் 19 லட்சம் பேர், ஜிம்பாப்வேயில் 15 லட்சம் பேர் உட்பட ஒட்டுமொத்தமாக 1.4 கோடி பேர் பசியால் பரிதவித்து வருவதாக உலக உணவு திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

மலாவி மக்களின் முக்கிய உணவுப் பொருளான மக்கா சோளத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ரேஷன் கடைகள் மூலம் மக்காசோளம் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக ரேஷன் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இதுகுறித்து உலக உணவு திட்ட அமைப்பின் செயல் இயக்குநர் எர்தாரின் கூறியபோது, எல்நினோ பருவநிலை மாறுபாடு காரணமாக தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. அந்த நாடுகளின் மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் களுக்கு உலக நாடுகள் தாராள மாக உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இவை தவிர தெற்கு சூடான், எத்தியோப்பியா, சோமாலியா உள்ளிட்ட நாடுகளிலும் கடும் வறட்சி நிலவுகிறது. எத்தியோப்பி யாவில் சுமார் ஒரு கோடி மக்களுக்கு உணவு தேவைப்படு வதாக அந்த நாட்டு சமூக ஆர்வ லர்கள் உதவி கோரியுள்ளனர்.

தென்னாப்பிரிக்கா அருகில் உள்ள லெசோத்தோ நாட்டில் கடும் வறட்சி நிலவுவதால் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அந்த நாட்டில் 6.5 லட்சம் பேர் பசியால் வாடுகின்றனர். இது அந்நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். தென்னாப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினை குறித்து ஆப்பிரிக்க நாடுகளில் பணியாற் றும் ஐ.நா. சபை அலுவலர்கள் கூறியதாவது: சிரியா, இராக்கில் நடைபெறும் உள்நாட்டுப் போரால் அந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் பேரழிவுகளைச் சந்தித்து வருகின்றனர். ஆப்பிரிக்க நாடு களில் தலைதூக்கியுள்ள பஞ்சம் அதைவிட கொடுமையானதாக இருக்கக்கூடும் என்று அஞ்சுகி றோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in