

அமெரிக்காவின் உளவு அமைப் பான சிஐஏ, வெளிநாட்டு உளவு அமைப்புகளுடன் கைகோர்த்து ஸ்மார்ட் டிவி, மொபைல் போன் களில் கண்காணிப்பு கருவியை பொருத்தி, உளவு பார்த்து வந்ததாக விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அரசின் பல்வேறு ரகசிய ஆவணங்களை அவ்வப் போது வெளியிட்டு விக்கிலீக்ஸ் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது அமெரிக்காவின் உளவு அமைப் பான சிஐஏ எவ்வாறு உளவு பார்த்து வந்தது என்ற தகவலை வெளியிட்டுள்ளது.
உளவு பார்ப்பதற்காக வெளி நாட்டு உளவு அமைப்புகளுடன் சிஐஏ கைகோர்த்து செயல்பட்ட தாகவும், மைக்ரோசாப்ட் நிறுவ னம் தயாரித்த கணினிகள், மடிகணினிகள், ஆப்பிள் ஐ-போன் கள், கூகுள் ஆன்ட்ராய்ட் போன்கள், சாம்சங் ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் உளவு பார்ப்பதற்கான கருவிகளை சிஐஏ பொருத்தி வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விர்ஜினியாவில் உள்ள சிஐஏவின் சைபர் உளவு பிரிவில் தனிமையான இடத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த 8,761 ஆவணங்களை விக்கிலீக்ஸ் அண்மையில் கைப்பற்றியதாகவும், அதில் இது தொடரபான தகவல்கள் இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவித் துள்ளது.