நேபாள அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் கட்சி

நேபாள அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் கட்சி
Updated on
1 min read

நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா தனது அமைச்சரவையை விரிவு படுத்தியுள்ளார். முக்கிய கூட்டணிக் கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்)-க்கு அதிகாரம் மிக்க உள்துறையை வழங்கியதை தொடர்ந்து அவர்கள் அமைச் சரவையில் சேர்ந்தனர். இதனால் அரசு அமைப்பதில் இருந்த நிச்சயமற்ற நிலை முடிவுக்கு வந்தது.

601 உறுப்பினர்கள் கொண்ட நேபாள அரசியல் நிர்ணய சபைக்கு கடந்த ஆண்டு நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நேபாள காங்கிரஸ் கட்சி 194 இடங்களில் வென்று முதலிடம் பெற்றது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) 173 இடங்களுடன் இரண்டாமிடம் பெற்றது.

இந்நிலையில் இக்கட்சி ஆதரவு டன் நேபாள காங்கிரஸ் கட்சியின் சுஷில் கொய்ராலா தலைமையில் 2 பேர் கொண்ட அமைச்சரவை பிப்ரவரி 11ம் தேதி பதவியேற்றது. எனினும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக இவ்விரு கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்படாததால், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) அமைச்சரவையில் சேர மறுத்து விட்டது. இதனால் அரசு அமைப்பதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இவ்விரு கட்சிகள் இடையே இரு வாரங்களாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தையில் திங்கள் கிழமை உடன்பாடு ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியின் 7 அம்ச கோரிக்கைகளை நேபாள காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. மேலும் அதிகாரம் மிகுந்த உள் துறையுடன் துணை பிரதமர் பதவி வழங்க ஒப்புக்கொண்டது.

இதைத் தொடர்ந்து பிரதமர் சுஷில் கொய்ராலா தனது அமைச்சரவையை செவ்வாய்க் கிழமை விரிவுபடுத்தினார். இதில் நேபாள காங்கிரஸ் சார்பில் 9 பேரும், நேபாள கம்யூ னிஸ்ட் கட்சி (யுஎம்எல்) சார்பில் 10 பேரும் அதிபர் ராம் பரண் யாதவ் முன்னிலையில் அமைச்சர்களாகப் பதவியேற்ற னர். இதைத் தொடர்ந்து பிரதமர் உள்பட அமைச்சரவை உறுப்பினர் கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்)-ன் துணைத்தலைவர் ராம் தேவ் கௌதம் துணை பிரதமராகவும், உள்துறை அமைச் சராகவும் பொறுப்பேற்றார். இக் கட்சியின் மகேந்திர பாண்டே வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in