வங்கதேச விடுதியில் தீவிரவாதிகள் கொலைவெறித் தாக்குதல் 20 பேர் பலி; பயங்கரவாதி உயிருடன் பிடிபட்டார்

வங்கதேச விடுதியில் தீவிரவாதிகள் கொலைவெறித் தாக்குதல் 20 பேர் பலி; பயங்கரவாதி உயிருடன் பிடிபட்டார்
Updated on
1 min read

வங்கதேச தலைநகர் டாக்காவில் விடுதி ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலுக்கு 20 பேர் பலியாகியுள்ளனர். பயங்கரவாதிகளுக்கு எதிரான கடும் சண்டையில் 5 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர், ஒருவர் உயிருடன் பிடிபட்டார்.

இதனால் ‘ஆபரேஷன் தண்டர்போல்ட்’ நிறைவடைந்ததாக பாதுகாப்புப் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்காவில் உள்ள உயர்பாதுகாப்பு மண்டலமான குல்ஷன் டிப்ளமேட்டிக் பகுதியில் உள்ள தி ஹோலி ஆர்டிசன் பேக்கரி என்ற விடுதியில் வெள்ளிக்கிழமையன்று இரவு 8.45 மணியளவில் பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் நுழைந்தனர். அவர்கள் ஹோட் டல் ஊழியர்கள் மற்றும் வாடிக்கை யாளர்கள் 20 பேரை பிணைக்கைதி யாக பிடித்து வைத்துக் கொண்டனர். பின்னர் இவர்களையும் படுகொலை செய்துள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் 20 உடல்களை மீட்டனர், இவர்களில் பெரும்பாலானோர் அயல்நாட்டவர்களாவர்.

பாதுகாப்பு படையினர் விடுதிக்குள் அதிரடியாக நுழைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் 7 தீவிரவாதிகளில் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர், ஒருவர் உயிருடன் பிடிபட்டார். முன்னதாக தீவிரவாதிகள் தாக்குதலுக்கு வெள்ளியன்று 2 போலீஸார் பலியாகினர், 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனையடுத்து ‘ஆபரேஷன் தண்டர்போல்ட்’ முடிந்ததாக பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதோடு, தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு மதம் கிடையாது என்றார்.

இன்று காலை 7.40 மணியளவில் தொடங்கிய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் 9.30 வரை நீடித்தது.

இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் பொறுப்பேற்றுள்ளது. இந்தியத் துணைக்கண்ட அல்-கய்தா அமைப்பும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புப் படையினர் தாக்குதல் தொடங்கும் முன்பே 20 பிணைக்கைதிகளை கொடூரமாக கொன்றுள்ளனர் பயங்கரவாதிகள். பயங்கர ஆயுதங்களினால் அவர்கள் கொலை செய்யப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐஎஸ் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது குறித்து அமெரிக்கா இன்னமும் உறுதி செய்யவில்லை. ஆனால் வங்கதேசத்துக்கு முழு ஆதரவளிப்போம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in