மாலத்தீவில் இந்திய தூதர் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

மாலத்தீவில் இந்திய தூதர் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
Updated on
1 min read

மாலத்தீவுக்கான இந்திய தூதர் ராஜீவ் சஹாரே, கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேற்று மாலை சுமார் 6.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மரம் நபர்கள் இரண்டு பேர், தூதரகத்திற்கு முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய தூதர் காரின் மீது பாறாங்கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் கார் பலத்த சேதமடைந்ததது. இருப்பினும்,தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில், தாக்குதல் சம்பவத்துக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் முகம்து நஷீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாலத்தீவு நாட்டில் அதிபர் தேர்தல் சர்ச்சையில் சர்வதேச தலையீட்டை இந்தியா வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in