

அண்டை நாடுகளுடன் கடல் எல்லை தகராறு இருந்து வரும் நிலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளின் அமைப்பிடம் தொடர்பான விரிவான தகவல்கள் மற்றும் படங்களை சீனா சேகரித் துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் பெருங்கடல் நிர்வாகத் துறை கூறுகையில், “சீனா தனது எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சுமார் 10,500 தீவுகளின் அமைப்பிடம் தொடர்பான விரிவான தகவல்கள் மற்றும் படங்களை ரிமோட் சென்சிங் மூலம் திரட்டும் பணி முடிந்துள்ளது. இத்தீவுகளை கண்காணிப்பது, பாதுகாப்பது, மேம்படுத்துவது ஆகிய பணிகளை திறமுடன் மேற்கொள்ள இத்தகவல்கள் உதவும்” என்று கூறியுள்ளது.
தென் சீனக்கடல் படகுதியில் சீனாவுக்கும் வியட்நாம், பிலிப்பின்ஸ், மலேசியா, புரூனே, தைவான் ஆகிய நாடுகளுக்கும் கடல் எல்லை தகராறு இருந்து வருகிறது. கிழக்கு சீனக் கடல் பகுதியில் டயாவ்யு அல்லது சென்காகு தீவுகள் யாருக்கு சொந்தம் என்பதில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் தகராறு இருந்து வருகிறது.
- பி.டி.ஐ.