Last Updated : 07 Jun, 2016 11:07 AM

 

Published : 07 Jun 2016 11:07 AM
Last Updated : 07 Jun 2016 11:07 AM

அறிவியல் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற என்ன காரணம்? - அமெரிக்க ஆய்வாளர்கள் விளக்கம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாண பல்கலைக்கழகம் அறிவியல் பாடத் தேர்வுகளில் மாணவிகளை விட, மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற ஆய்வு நடத்தியது. அதில் அறிவியல் தேர்வுக்கான கேள்விகள் வடிவமைக்கும் முறைகள் மாணவர் களுக்கு எளிதில் புரிவதால் அவர்கள் அதிக மதிப்பெண் பெறுகின்றனர் என தெரியவந்துள்ளது. இதே போல சமூக பொருளாதார அந்தஸ்தில் முன்னேறிய மாணவர்களும் அறிவியல் பாடத்தில் நல்ல மதிப்பெண் பெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமூக பொருளாதார அந்தஸ்தில் உயர்வு, தாழ்வு நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி திறன் சமமாக இருந்தாலும், சிந்தனையை தூண்டும் சவாலான கேள்வி பதில் தேர்வை மாணவிகளை விட, மாணவர்களே சிறப்பாக எழுதுகின்றனர்.

சுமார் 4,800 மாணவர்களிடம் 3 ஆண்டு களாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்தின் கிறிஸ்டியன் ரைட் கூறும்போது, ‘‘சவால்கள் அடிப் படையில் மாணவ, மாணவிகளிடையே இத்தனை பெரிய பேதம் ஏற்பட்டுள் ளதை கண்டறிந்ததும் மிகவும் ஆச்சரிய மடைந்தோம். படிப்பில் கெட்டிக்காரர் களாக இருந்தாலும் சவாலான கேள்விகள் மாணவிகளையும், சமூக பொருளா தாரத்தில் பின்தங்கிய மாணவர்களையும் எதிர்மறையாக பாதிக்கிறது’’ என்றார்.

இந்த பேதங்கள் மறைய ஆக்கப் பூர்வமான கற்பித்தல் முறைகளை பின்பற்ற வேண்டும் என ஆராய்ச்சி யாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x