

விண்வெளி துறை வர்த்தகத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) முந்திச் செல்கிறது என்று சீன அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:
இஸ்ரோ அமைப்பு அண்மையில் 104 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தியது. இதில் 96 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை. மிகக் குறைவான கட்டணம் என்பதால் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவை உலக நாடுகள் நாடுகின்றன.
சீன விண்வெளி நிறுவனம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த அதிக கட்டணம் நிர்ண யித்திருப்பதால் வர்த்தகத்தில் மிகவும் பின்தங்கியுள்ளோம். இந்த விவகாரத்தில் இந்தியாவிடம் இருந்து சீனா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கட்டுரையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.