

வடகொரிய அரசு மீண்டும் 2 ஏவு கணைகளை ஏவி பரிசோதித் துள்ளது.
சர்வதேச ஏவுகணை சட்டத் திட்டங்கள், ஐ.நா.வின் விதிமுறை கள் எதையும் வடகொரிய அரசு பின்பற்றுவதில்லை. பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டாலும் கவலைப்படாமல் தொடர்ந்து ஏவுகணை பரிசோதனைகளை செய்து வருகிறது. இந்நிலையில், 400 கி.மீ. தூரம் சென்று தாக்கு தல் நடத்தும் நடுத்தர 2 ஏவுகணை களை ஏவி நேற்று வடகொரிய அரசு பரிசோதித்து பார்த்துள்ளது. இத்தகவலை அமெரிக்கா மற்றும் தென் கொரியா ராணுவ அதிகாரிகள் உறுதி செய்தனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை 4 முறை வடகொரியா ஏவுகணை பரிசோதனை செய்து பார்த்தது. அதில் சில ஏவுகணை சோதனைகள் தோல்வி அடைந் தன. சில ஏவுகணைகள் வானில் வெடித்து சிதறின.
எனினும், 5-வது முறையாக நேற்று 2 ஏவுகணைகள் பரி சோதித்து பார்க்கப்பட்டன. எந்த இடத்துக்கும் எடுத்துச் செல்லக் கூடிய மசூடான் ரக ஏவுகணைகளை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவின்படி சோதனை செய்து பார்த்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வடகொரியா தொடர்ந்து ஏவு கணை சோதனை நடத்தி வருவ தால் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. ஏனெனில், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவ முகாம்களை தாக்கி அழிக்கும் திறன்படைத்த ஏவுகணையை வடகொரியா சோதனை செய்து பார்ப்பதுதான் காரணம்.
இதுகுறித்து தென் கொரிய முப்படை தளபதிகள் கூறும் போது, ‘‘வடகொரியா சோதனை நடத்தி பார்த்த மசூடான் ஏவு கணை வான்சான் பகுதியில் வெடித்து சிதறியது’’ என்றார். அதேபோல் ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறும்போது, ‘‘கொரிய கடல் பகுதியில் ஏவு கணையின் சிதறல்கள் விழுந்தன’’ என்று தெரிவித்துள்ளது.