அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாகிஸ்தானுக்கான நிதியுதவியை குறைப்பதற்கான 2 மசோதாக்கள் தோல்வி

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாகிஸ்தானுக்கான நிதியுதவியை குறைப்பதற்கான 2 மசோதாக்கள் தோல்வி
Updated on
1 min read

பாகிஸ்தானுக்கு நிதியுதவியை குறைப்பது தொடர்பான 2 சட்டத் திருத்த மசோதாக்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் தோல்வி அடைந்தன.

அணு ஆயுத நாடான பாகிஸ் தான், தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கா விட்டாலும் அந்த நாட்டுடன் நல்லுறவைப் பேணுவது அவசி யம் என்று பெரும்பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினரான டெட் போ, அவையில் ஒரு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அதில், “பாகிஸ்தானுக்கு கூட்டணி ஆதரவு நிதியாக (சிஎஸ்எப்) வழங்கப்படும் சுமார் ரூ.6 ஆயிரம் கோடியை ரூ.4,600 கோடியாகக் குறைக்க வேண்டும்” என வலியுறுத்தினார். இந்த மசோதா மீதான வாக்கெடுப்பின்போது 191 பேர் ஆதரவாகவும் 230 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் இந்த மசோதா தோல்வி அடைந்தது.

மற்றொரு உறுப்பினரான டானா ரோராபச்சர், பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதியுதவியை தடை செய்ய வலியுறுத்தி ஒரு சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இது 84-க்கு 236 என்ற விகிதத்தில் தோல்வி அடைந்தது.

இதுகுறித்து டெட் போ கூறும் போது, “சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனை மறைத்து வைத்திருந்தது பாகிஸ்தான். இதை அறிந்துகொண்ட நமது ராணுவம், அங்கு சென்று பின்லேடனை சுட்டுக் கொன்றது. இதைத் தாங்கிக்கொள்ள முடி யாத பாகிஸ்தான், அங்கு பணி யாற்றிய நமது உளவுத் துறை (சிஐஏ) உயர் அதிகாரிக்கு விஷம் வைத்தது. பாகிஸ்தானுக்கு நாம் கொடுக்கும் நிதியுதவி அமெரிக்கர்களை கொல்வதற்கே பயன்படுத்தப்படுகிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in