நடிகைகளின் அந்தரங்க படங்கள் வெளியானதற்கு நாங்கள் பொறுப்பல்ல: ஆப்பிள் நிறுவனம்

நடிகைகளின் அந்தரங்க படங்கள் வெளியானதற்கு நாங்கள் பொறுப்பல்ல: ஆப்பிள் நிறுவனம்
Updated on
1 min read

இணையத்தில் 100-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானதற்கு தங்களை குற்றம்சாட்ட முடியாது என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் ஐ - கிளவுட் கணக்கில் சேமிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் ஹேக்கர்களால் வெளியிடப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஹாலிவுட் நட்சத்திரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த விவகாரம் குறித்து அமெரிக்க புலனாய்வு மையத்தின் சைபர் பிரிவு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

ஆப்பிள் நிறுவனம் பெரிய திரை கொண்ட மாடலான ஐபோஃன் 6-ஐ அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், ஐ-கிளவுட் கணக்குகளிலிருந்து வெளியான ஹாலிவுட் நடிகைகளின் தனிப்பட்ட படங்கள் ஆப்பிள் நிறுவனத்திற்கு நெருக்கடி தருவதாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் நடிகைகளின் தனிப்பட்ட படங்கள் வெளியானதற்கு தங்களை குற்றம்சாட்ட முடியாது என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குறிப்பிட்ட சில பிரபலங்களின் கணக்குகளின் பெயர், கடவுச்சொற்கள் மற்றும் பாதுகாப்பு கேள்விகள் ஹேக்கர்களால் திருடப்பட்டு, தனிப்பட்ட விஷயங்களை இணையத்தில் வெளியானது உண்மைதான்.

ஆனால் இவை இணைய உலகில் மிகவும் சாதாரணமாகிவிட்டது. இந்த விதி மீறல்களுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் 'ஐ-கிளவுட்' அல்லது 'பைஃன்ட் மை ஐ-போஃன்' அப்ளிகேஷன்கள் பொறுப்பாகாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in