Published : 25 Dec 2013 12:00 AM
Last Updated : 25 Dec 2013 12:00 AM

நீதிமன்றம் செல்லும் சாலையில் வெடிகுண்டு: முஷாரப் மீதான வழக்கு ஒத்திவைப்பு

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வீஸ் முஷாரப் இஸ்லாமாபாதில் உள்ள தனது வீட்டில் இருந்து நீதிமன்றம் செல்லும் சாலையில் வெடிகுண்டு, துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் காரணமாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவர் மீதான தேசத் துரோக வழக்கு ஜனவரி 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக முஷாரப் இருந்தபோது 1999-ல் ஆட்சியைக் கைப்பற்றி னார். 2008 வரை அவர் அதிபராக பதவி வகித்தார். 2007-ல் பாகிஸ்தானில் அவர் அவசர நிலையை அமல்படுத்தினார். இதுதொடர்பாக தற்போது அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இஸ்லாமாபாதில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப் பட்டு உள்ளது. அந்த நீதிமன் றத்தில் தேசத் துரோக வழக்கு செவ்வாய்க்கிழமை விசார ணைக்கு வந்தது. அப்போது முஷாரப் ஆஜராகவில்லை.

அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் ஆஜராக முடியவில்லை என்று தெரிவித்தனர். முஷாரப் தனது வீட்டில் இருந்து நீதிமன்றம் செல்லும் பாதையில் 5 கிலோ எடை கொண்ட சக்திவாய்ந்த வெடி குண்டு செவ்வாய்க்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டது. மேலும் தோட்டாக்கள் நிரப்பிய 2 அதிநவீன துப்பாக்கிகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்ககப்பட்டது.

இந்தச் சம்பவத்தை நீதி மன்றத்தில் எடுத்துரைத்த முஷாரபின் வழக்கறிஞர்கள், தீவிரவாதிகளால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு கருதி அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று தெரிவித்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழக்கு விசாரணையை ஜனவரி 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x