Last Updated : 15 Sep, 2016 01:31 PM

 

Published : 15 Sep 2016 01:31 PM
Last Updated : 15 Sep 2016 01:31 PM

அமெரிக்க அதிபராக பணியாற்ற ஹிலாரி உடல் தகுதியுடன் உள்ளார்: சிகிச்சையளிக்கும் டாக்டர் சான்று

அமெரிக்க அதிபராக பணியாற்ற தேவையான உடல் தகுதியுடன் ஹிலாரி கிளிண்டன் (68) இருக்கிறார் என்று அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் நடந்த இரட்டை கோபுர தாக்குதல் நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜன நாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி மயங்கி சரிந்தார். அவரை பாதுகாவலர்கள் கைத்தாங் கலாககாருக்கு அழைத்துச் சென்றனர். அவர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்ப தாக தகவல்கள் வெளியாகின. தனது பிரச்சார திட்டங்களையும் ஹிலாரி ரத்து செய்தார்.

பிரச்சாரத்தில் விமர்சனம்

அதிபர் வேட்பாளரின் உடல் நலம் குறித்து அமெரிக்க மக்கள் மிகுந்த அக்கறை கொள்கின்றனர். அந்த வகையில் ஹிலாரியின் உடல்நலம் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய விவாதப் பொருளாகி உள்ளது.

குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய போது, என்னை போல ஹிலாரியால் ஒரு மணி நேரம் நின்று கொண்டு பேச முடியுமா? அவரால் தொடர்ந்து நிற்க முடியாது என்று விமர்சித்தார்.

டாக்டர் விளக்கம்

இந்தப் பின்னணியில் ஹிலாரி யின் டாக்டர் லிசா பர்டாக் கூறி யிருப்பதாவது: ஹிலாரி கிளிண் டன் பரவும் வகையில்லாத நோயி னால் பாதிக்கப்பட்டுள்ளார். 10 நாட்களுக்கு அவர் ஆன்டிபயாடிக் மருந்துகள் சாப்பிட பரிந்து ரைக்கப்பட்டுள்ளது. ஹிலாரி ஆரோக்கியமாக உள்ளார். அமெரிக்க அதிபராக பணியாற்ற தேவையான உடல் நலத்துடன் உள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஹிலாரியின் பிரச்சார குழுவினர் கூறியபோது, ஹிலாரி உடல்நலம் தேறி வருகிறார், விரைவில் அவர் தனது பிரச்சாரத்தை தொடங்குவார் என்று தெரிவித்தனர்.

ட்ரம்ப் முந்துகிறார்

அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து ஒஹியோ, புளோரிடா மாகாணங்களில் அண்மையில் கருத்துக் கணிப்பு நடத்தப் பட்டது. இதில் ஒஹியோ மாகாணத்தில் டொனால்டு ட்ரம்ப் 46 சதவீத வாக்குகளும் ஹிலாரி 41 சதவீத வாக்குகளும் பெற்றனர். புளோரிடோவில் ட்ரம்புக்கு 47 சதவீதம் பேரும் ஹிலாரிக்கு 44 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x