சீன - அமெரிக்க உறவில் முன்னேற்றம்: ட்ரம்ப்

சீன - அமெரிக்க உறவில் முன்னேற்றம்: ட்ரம்ப்
Updated on
1 min read

சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடனான சந்திப்பு இரு நாடுகளின் உறவில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருவருக்கிடையேயான சந்திப்பு வெள்ளிக்கிழமை காலை புளோரிடாவில் நடைபெற்றது.

இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் டர்ம்ப் கூறும்போது, "அமெரிக்கா சீனாவுடனான உறவில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சினைகள் விலகியுள்ளன. இந்த சந்திப்பின் மூலம் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடான என் நட்புறவு வளர்ந்துள்ளது. எதிர்காலத்திலும் இது தொடரும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று கூறினார்.

ட்ரம்ப்புனான சந்திப்பு குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், "சீன - அமெரிக்க வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பற்றி ஆரோக்கியமான முறையில் இரு தரப்பிலும் பேசப்பட்டது. சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான உறவை சரியான முறையில் வைத்திருக்க ஆயிரம் காரணங்கள் உள்ளன. ஆனால் இரு நாட்டு உறவைக் கெடுக்க ஒரு காரணமும் கிடையாது" என்று கூறப்பட்டுள்ளது.

வடகொரியாவின் அணு ஆயுத ஏவுகணை சோதனைகளுக்கு எதிராக அமெரிக்காவும், சீனாவும் எச்சரிக்கை தெரிவித்து வரும் நிலையில் இருநாட்டு அதிபர்களிடையேயான இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in