

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மாகாணத்தில் உள்ள காவல் நிலையத்தின் மீது தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள நங்கர்ஹர் மாகாண கவர்னர் மாளிகை அருகே அமைந்துள்ள காவல் நிலையத்தை இன்று காலை தாலிபான்கள் சுற்றி வளைத்தனர்.
அப்போது காவல் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சில் போலீசார் உள்பட 18 பேர் பலியாகியுள்ளனர்.
பலியானவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த மாகாண காவல் துறையின் செய்தி தொடர்பாளர் அஸ்ரத் உஸ்ஸெய்ன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தற்போது அந்த பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தாலிபான் செய்தி தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித், செய்தி ஊடகம் ஒன்றிற்கு அனுப்பியுள்ள மின்னஞ்ல் தகவலில், இந்த தாக்குதலுக்கு தாலிபான் இயகக்த்தினர் பொறுப்பேற்பதாக குறிப்பிட்டுள்ளார்.