

ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியில் முக்கிய பதவிகளில் இருந்த மஹிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் 9 பேரை, அதிபர் மைத்ரிபால சிறிசேனா அதிரடியாக நீக்கியுள்ளார்.
ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுவதை தவிர்க்க, கட்சியில் களையெடுப்பு நடவடிக்கைகளை மைத்ரிபால சிறிசேனா மேற்கொண்டுள்ளார். இதில், ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக இருந்த முன்னணி நிர்வாகிகள் 9 பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
கட்சியில் தனது கரத்தை வலுப்படுத்திக்கொள்ளும் வகையில், புதிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை அவர் நியமித்துள்ளார். கொழும்புவில் உள்ள அதிபர் இல்லத்தில் இதற்கான முடிவு நேற்று மேற்கொள்ளப்பட்டது.
இலங்கையில் சிறிசேனா அரசுக்கு எதிராக, ராஜபக்சே ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு, கடந்த மாதம் 5 நாள் பேரணி நடத்தினர். கட்சியை உடைத்து, பலவீனப்படுத்த தனது ஆதரவாளர்களை தூண்டிவிடுவதாக., ராஜபக்சே மீது சிறிசேனா குற்றம்சாட்டி வருகிறார்.
அடுத்த மாதம், கட்சியின் 65-வது ஆண்டு மாநாடு நடைபெற உள்ள நிலையில் கட்சிகயில் தனது நிலையை ஸ்திரப்படுத்திக்கொள்ளும் நோக்கில், ராஜபக்தேச ஆதரவாளர்களை முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கி, தனக்கு விசுவாசமானவர்களை பணியில் அமர்த்தும் நடவடிக்கையில் சிறிசேனா ஈடுபட்டுள்ளார்.