

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஜி-20 நாடுகள் மாநாட்டில் அனைவரும் விரும்பும் நாட்டுத் தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார் என்று 'தி கார்டியன்' தனது கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா உட்பட அனைத்து நாட்டுத் தலைவர்களும் மோடியைச் சுற்றிச் சுற்றி வருவதாகவும், ஒபாமா மோடியுடன் பேசி சிரித்து வந்த காட்சியையும் காண முடிந்தது என்றும் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
ஒபாமா, விளாடிமிர் புடின், ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் என்று முக்கியத் தலைவர்கள் மோடியின் கவனத்தைப் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மோடியை ஆஸ்திரேலியப் பிரதமர் அபாட் வரவேற்ற போது, அவரை கட்டி அணைத்ததும் அங்கு பெரிய செய்தியாக வலம் வந்துள்ளது.
மேலும் அபாட், மாநாட்டுத் தலைவர்கள் அனைவரும் தங்களது முதல் பெயரை சொல்லி அழைத்தால் நெருக்கம் அதிகமாக உணரப்படும் என பரிந்துரைத்ததாகவும் தெரிகிறது.
தி கார்டியன் தனது கட்டுரையில் கூறியுள்ள வாசகம் இதோ: “இந்தியப் பிரதமர் மோடி, இந்த ஜி-20 மாநாட்டில் மிகவும் பிரபலமான மனிதராகத் திகழ்கிறார். மற்ற தலைவர்கள் இவரைப் பார்க்கவும், இவரால் பார்க்கப்படவும் விரும்புகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.