இளைஞரை விழுங்கிய மலைப்பாம்பு: இந்தோனேசியாவில் விபரீதம்

இளைஞரை விழுங்கிய மலைப்பாம்பு: இந்தோனேசியாவில் விபரீதம்
Updated on
1 min read

இந்தோனேசியாவில் இளைஞர் ஒருவர் மலைப்பாம்பால் விழுங்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மலைப்பாம்பால் விழுங்கப்பட்டு உயிரிழந்த இளைஞர் இந்தோனேசியாவின் சுலவேசி தீவைச் சேர்ந்தவர் ஆவார்.

இது குறித்து சுலவேசி தீவு பகுதியின் செயலாளர் ஜுனைதி, ஏபி செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, "இந்தோனேசியாவின் சுலவேசி தீவைச் சேர்ந்த அக்பர் (25) என்ற இளைஞர் திங்கட்கிழமை தீவில் எண்ணெய் எடுக்கச் சென்றிருக்கிறார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரை தேட ஆரம்பித்துள்ளனர், அதன் பின் நடத்தப்பட்ட தேடுதல் பணியில் 7 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று நகர முடியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

அதன் வயிற்றுப் பகுதியை வெட்டும்போது, அக்பரின் கால் தெரிந்தது. அந்த மலைப்பாம்பு அக்பரை பின்பக்கமாக வந்து தாக்கியுள்ளது. அக்பர் காணாமல்போனது திங்கட்கிழமை வரை தெரியவில்லை. அவரது மனைவி தன் பெற்றோரைப் பார்ப்பதற்காக வெளியூர் சென்றிருக்கிறார். அக்பரின் வீடு பூட்டிய நிலையில் உள்ளதைக் கண்ட அவரது மாமா சந்தேகம் எழுப்பிய நிலையில்தான் அவர் மலைப்பாம்பால் விழுங்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது" என்றார்.

இந்தோனேசியா மற்றும் தென் கிழக்கு ஆசிய பகுதிகளில் மலைப்பாம்புகள் பரவலாக காணப்படுகின்றன. மலைப்பாம்புகள் மனிதர்களை விழங்குவது அரிதான ஒன்று எனவும் மலைப்பாம்புகள் பெரும்பாலும் குரங்குகள், பன்றிகள் மற்றும் பிற சிறிய பாலூட்டிகளையே உணவாக உட்கொள்ளும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in