பருவநிலை மாற்றம்: சீனா, அமெரிக்கா திட்டங்கள் அறிவிப்பு

பருவநிலை மாற்றம்: சீனா, அமெரிக்கா திட்டங்கள் அறிவிப்பு
Updated on
1 min read

முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்னையான பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க சீனாவும், அமெரிக்காவும் தங்களின் திட்டங்களை அறிவித்துள்ளன. இதில் சீனா முதன்முறையாகத் தனது திட்டத்தை அறிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டுறவு மாநாடு சீனாவில் நடந்தது. அந்த மாநாட்டின் முடிவில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பருவநிலை மாற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரண்டு நாடுகளும் தாங்கள் வெளியேற்றும் கார்பன், மீத்தேன் உள்ளிட்ட‌ பசுமை இல்ல வாயுக்களின் அளவை மூன்று மடங்கு குறைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தன.

இதில் அமெரிக்கா தான் வெளியிடும் வாயுக்களின் அளவை 26 முதல் 28 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளது. சீனா தனது மாற்று எரிபொருள் சக்தி பயன்பாட்டை மேலும் 20 சதவீதம் அதிகரிக்க உள்ளது.

இதுகுறித்து அதிபர் ஒபாமா கூறும்போது, "உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களாக நாங்கள் இருப்பதால், பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் எங்களுக்கு மிக முக்கியப் பங்குண்டு. இந்த விஷயத்தில் சீனா, ஓர் 'ஆற்றல் புரட்சி'க்கு அறைகூவல் விடுக்கிறது. சீனாவின் இந்த முயற்சியால் இங்கு நிலவும் காற்று மாசுபாட்டுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in