

87 மணி நேரம் தொடர்ந்து டி.வி. பார்த்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த மூவர் கூட்டணி. டான் ஜோர்டான், ஸ்பென்சர் லார்சன், கிறிஸ் லாக்லின் லால் வேகாஸ் மையத்தில் வைத்து இந்த சாதனையைப் படைத்தனர்.
இதில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 5 நிமிடம் இடைவேளை அளிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அவர்கள் கழிவறைக்கு செல்வது உள்ளிட்டவற்றுக்கு அனுமதிக்கப் பட்டனர். டி.வி.பார்க்கும்போது சாப்பிடவும், குளிர்பானம் அருந்தவும் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு முன்பு தொடர்ந்து 86 மணி நேரம் டி.வி. பார்த்ததே உலக சாதனையாக இருந்தது.