

வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் தொடர்கிறது. வன்முறைகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
அதிபர் நிகோலஸ் மதுரோவின் ஆட்சிக்கு எதிராக கடந்த பிப்ரவரி 4-ம் தேதி முதல் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பாது காப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் வெடிக்கிறது. இம்மோதல் வன்முறையாக வெடித்து உயிரிழப்புக்குக் காரணமாகிறது.
இந்நிலையில் மாணவர்களும் அரசு எதிர்ப்பாளர்களும் மீண்டும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கடந்த திங்கள்கிழமை மாலை டேனியல் டினோகோ (24) என்ற மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தப் போராட்டங்கள் தன் ஆட்சியைக் கவிழ்க்கச் செய்யப் படும் சதி எனக் கூறி வரும் அதிபர் மதுரோ, ராணுவத்தைக் கொண்டு போராட்டங்களை ஒடுக்க முயன்று வருகிறார். போராட்டக்காரர்களும் அரசும் வன்முறைக்கு ஒருவரை யொருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.