என்.எஸ்.ஜி. உறுப்பினராக இந்தியாவை விட பாகிஸ்தானுக்கே தகுதிகள் அதிகம்: சர்தாஜ் அஜீஸ்

என்.எஸ்.ஜி. உறுப்பினராக இந்தியாவை விட பாகிஸ்தானுக்கே தகுதிகள் அதிகம்: சர்தாஜ் அஜீஸ்
Updated on
1 min read

அணுசக்தி விநியோக நாடுகள் அமைப்பில் (என்.எஸ்.ஜி.) உறுப்பினராக இந்தியாவை விட பாகிஸ்தான் அதிக தகுதிகள் பெற்றுள்ளது என்று பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் தெரிவித்துள்ளார்.

48 நாடுகள் கொண்ட இந்த அமைப்பு அணு ஆயுத விவகாரம் தொடர்பாக ஒருமித்த அளவுகோலை வைத்தால் அப்போது இந்தியாவை விட பாகிஸ்தானுக்கே என்.எஸ்.ஜி. உறுப்பினராக அதிக தகுதிகள் உள்ளது என்கிறார் சர்தாஜ் அஜீஸ்.

டான் நியூஸுக்கு சர்தாஜ் அஜீஸ் அளித்த பேட்டியில் இது பற்றி கூறியிருப்பதாவது:

48 நாடுகள் கொண்ட என்.எஸ்.ஜி. ஒருமித்த அளவுகோலை கடைபிடித்தால் நிச்சயம் இந்தியாவை விட பாகிஸ்தானுக்குத்தான் உறுப்பினராக அதிக தகுதிகள் உள்ளன. எங்கள் உத்தி என்னவெனில் இந்தியா விண்ணப்பித்த பிறகு நாம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த நோக்கத்திற்காகவே எங்களது விண்ணப்பத்தை கடந்த 3 மாதங்களாகவே தயார் நிலையில் வைத்திருந்தோம்.

அளவுகோல் சார்ந்த உறுப்பினர் தகுதித் தேர்வுக்கான பாகிஸ்தான் அணுகுமுறைக்கு ஆதரவு கூடியுள்ளது. இந்தியாவுக்கு என்.எஸ்.ஜி. உறுப்பினர் தகுதி கிடைத்தால் அதன் பிறகு வலுவான தகுதிகள் மற்றும் முயற்சியினால் பாகிஸ்தானுக்கும் கிடைப்பது சுலபமாகிவிடும்.

இந்தியாவுடன் பாகிஸ்தானை ஒப்பிட்டுப் பாருங்கள், இந்தியா 1974-ம் ஆண்டு அணுகுண்டு சோதனை மேற்கொண்டனர். அதாவது அமைதிக்காகவும் சமூகப் பயன்பாட்டுக்காகவும் அளிக்கப்பட்ட அணுப்பொருளை இந்தியா தவறாகப் பயன்படுத்தியதன் ஒரு உதாரணம் இது. பிறகுதான் என்.எஸ்.ஜி. உருவானது. அதன் பிறகு பிளக்கத்தகுந்த அணுப்பொருள் இந்தியாவிலிருந்து களவாடப்பட்டது. ஆனால் பாகிஸ்தானில் இப்படிப்பட்ட சம்பவம் நிகழ்ந்ததேயில்லை” என்று பாகிஸ்தான் தரப்பு நியாயத்தை அஜீஸ் எடுத்து வைத்தார்.

1974-ம் ஆண்டு இந்தியா அணுகுண்டு சோதனை செய்த பிறகு தொடங்கப்பட்ட என்.எஸ்.ஜி. கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் உறுப்பினர் விவாதம் உச்சம் பெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in