Last Updated : 26 May, 2017 04:10 PM

 

Published : 26 May 2017 04:10 PM
Last Updated : 26 May 2017 04:10 PM

நண்பர் கொலைக்குப் பழி தீர்க்கவே மான்செஸ்டர் தாக்குதல்?

லண்டன் மான்செஸ்டர் நகரில் பாப் இசை நிகழ்ச்சியில் தற்கொலைப் படை தாக்குதலை நிகழ்த்தி 22 பேர் பலியான சம்பவத்தில் சந்தேக நபர் சல்மான் அபேடி தன் நண்பரின் கொலைக்குப் பழி வாங்குவதற்காக இத்தகைய கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று அபேடி குடும்பத்திற்கு நெருக்கமானவர் ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

அப்படிப்பட்ட பழிதீர்க்கும் ஆசையை அவர் பலமுறை தெரிவித்திருப்பதாக அந்த நபர் கூறுகிறார், ஆனால் இவர் தன் பெயரையோ, அடையாளத்தையோ தெரிவிக்கவில்லை.

2016-ம் ஆண்டு மே மாதம் மான்செஸ்டரில் பிரிட்டன் இளைஞர்கள் தாக்கியதில் அபேடியின் நண்பர் ஒருவர் பலியானார் என்றும் அவரும் லிபியாவிலிருந்து வந்தவர் என்றும் கூறப்படுகிறது

இதனையடுத்து அபேடி குடும்பத்துக்கு நெருக்கமான இந்த நபர் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “மான்செஸ்டரில் 2016-ம் ஆண்டு மே மாதம் லிபியா நாட்டைச் சேர்ந்த அபேடியின் நண்பர் கொலை செய்யப்பட்டது மான்செஸ்டரில் வசிக்கும் லிபியா நாட்டுக்காரர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக சல்மான் அபேடி கொந்தளித்துப் போனார், இதனையடுத்து இதற்குப் பழிதீர்ப்பேன் என்று அவர் கூறிவந்தார்.

அக்கம்பக்கங்களிலிருந்த லிபியர்களை அமைதிப் படுத்த முடியவில்லை. அவர்கள் தங்களை வேண்டுமென்றே குறிவைக்கின்றனர் என்று உணர்ந்தனர். அதாவது முஸ்லிம்கள் என்பதால் தாக்கப்படுவதாக உணர்ந்தனர்.

நான் அபேடியிடம் பேசிய போது கூட இது ஒரு குற்றச்சம்பவம் என்று அவரை சமாதானப்படுத்த முனைந்தேன். ஆனால் முடியவில்லை” என்றார்.

2016-ல் பிரிட்டன் இளைஞர்கள் தாக்குதலில் பலியான லிபியர் பெயர் அப்துல் வஹாப் ஹஃபீதா. அவரைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் இன்னமும் விசாரணையில் உள்ளனர்.

இந்நிலையில் மான்செஸ்டர் தாக்குதலுக்கு இந்தச் சம்பவமும் பின்புலமாக இருக்கும் என்று ஐயம் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x