நேதாஜியின் மரணத்தை ஜப்பான் உடனே உறுதி செய்தது: பிரிட்டிஷ் ஊடகம் புதிய தகவல்

நேதாஜியின் மரணத்தை ஜப்பான் உடனே உறுதி செய்தது: பிரிட்டிஷ் ஊடகம் புதிய தகவல்
Updated on
1 min read

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணத்தை சில வாரங்களிலேயே அமெரிக்காவிடம் ஜப்பான் உறுதி செய்தது என்று பிரிட்டிஷ் ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.

நேதாஜியின் இறப்பு விவரங்கள் அடங்கிய ஜப்பான் அரசின் 60 ஆண்டு பழமையான ஆவணம் அண்மையில் பிரிட்டிஷ் இணையதளம் ஒன்றில் வெளியானது. அதில் 1945 ஆகஸ்ட் 18-ம் தேதி தைவான் விமான விபத்தில் நேதாஜி இறந்துவிட்டார் என்று உறுதியாக கூறப்பட்டுள்ளது.

நேதாஜி பயணம் செய்த விமா னம் ஓடுபாதையில் இருந்து மேலெழும்பி 20 மீட்டர் உயரத்தில் பறந்தபோது, இடதுபக்க இறக்கை யில் விசிறி உடைந்து விபத்துக் குள்ளானது. இதில் பலத்த தீக் காயங்களுடன் மீட்கப்பட்ட போஸ், தைபே நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றிரவு 7 மணிக்கு அவர் இறந்தார். ஆகஸ்ட் 22-ல் அவரது உடல் தகனம் செய்யப் பட்டது என்று ஜப்பானிய ஆவ ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை வெளியிட்ட பிரிட்டிஷ் இணையதளம் நேற்று கூடுதல் விவரங்களைப் பதிவேற்றம் செய்தது. அதன் விவரம் வருமாறு:

தென் மேற்கு பசிபிக் அமெரிக்க கூட்டுப் படையின் கமாண்டராக பணியாற்றிய ஜெனரல் டக்ளஸ் மார்க் ஆர்தர், நேதாஜியின் மரணம் குறித்து ஜப்பான் ராணுவத்திடம் விளக்கம் கோரினார். அதற்கு 2 வாரங்களில் பதில் அளித்த ஜப்பான் ராணுவம், தைவான் விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்துவிட்டார் என்று உறுதி செய்தது என்று பிரிட்டிஷ் இணையதளம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in