ஆப்கனில் 65 தீவிரவாதிகள் விடுவிப்பு: அமெரிக்கா அதிருப்தி

ஆப்கனில் 65 தீவிரவாதிகள் விடுவிப்பு: அமெரிக்கா அதிருப்தி
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானின் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 65 தலிபான் கைதிகளை அந்நாட்டு அரசு வியாழக்கிழமை விடுவித்தது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

விடுவிக்கப்பட்ட கைதிகள் அனைவரும் 32 ஆப்கன் வீரர்களையும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் 23 வீரர்களையும் சுட்டுக் கொன்றவர்கள். அவர்கள் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று அமெரிக்கா எச்சரித்திருந்தது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.

விடுவிக்கப் பட்டவர்களில் முகமது வாலி என்பவர் வெடிகுண்டுகளை தயாரிப்பதில் நிபுணர். அவருக்கு சாலையோரம் நிகழ்ந்த பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

65 கைதிகளை விடுவிக்கும் உத்தரவை ஆப்கன் அதிபர் ஹமீது கர்சாய் கடந்த பல வாரங்களுக்கு முன்பே வெளியிட்டிருந்தார். அமெரிக்காவின் எதிர்ப்பு காரணமாக அவர்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தை ஆராய்ந்த ஆப்கன் மறுஆய்வு குழு, கைதிகளை விடுவிக்க ஒப்புதல் அளித்தது.

பக்ராம் விமானப் படைத் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த பர்வான் சிறையிலிருந்து வியாழக் கிழமை காலை தீவிரவாதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in