

பிரான்ஸ் மீது மீண்டும் கொலை வெறித் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் நெருக்கடியுடன் வாழ் வதற்கு மக்கள் பழகிக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு பிரதமர் மானுவேல் வால்ஸ் எச்சரித்துள்ளார்.
கடந்த ஆண்டு நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் 130 பேர் உயிரிழந்ததால், போலீஸாருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையிலும், சந்தேகப்படும் நபர்களின் வீடுகளில் சோதனை நடத்த ஏதுவாகவும் அதிபர் ஹொலாந்தே அவசரநிலையை பிரகடனப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் நீஸ் நகரில் லாரியை ஓட்டி வந்து 84 பேரை தீவிரவாதி ஒருவன் கொடூரமாக கொலை செய்தான். இதையடுத்து, மேலும் 6 மாதங்களுக்கு அவசரநிலை நீட்டிக் கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது, எம்பிக்கள் மத்தியில் பேசிய அந்நாட்டு பிரதமர் மானுவேல் வால்ஸ், ‘‘ஏற்கெனவே 8 மாதங் களாக அவசரநிலை அமலில் உள்ள நிலையில், இதை நீட்டிப் பதற்கு எனக்கு மிகுந்த கடின மாகவே உள்ளது. எனினும் நாட்டை காப்பாற்றுவது எனது கடமை. பிரான்ஸ் மீது அடுத் தடுத்து தாக்குதல் நடத்தப் படலாம். அப்பாவி மக்கள் கொல்லப்படலாம். எனவே மக்கள் நெருக்கடியான சூழலில் வாழ்வதற்கு பழகிக்கொள்ள வேண்டும்’’ என்றார்.